இவ்வாண்டுக்கான நீட் தேர்வு மே 6 -ஆம் தேதி  நடைபெறும்: சிபிஎஸ்சி அறிவிப்பு!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
இவ்வாண்டுக்கான நீட் தேர்வு மே 6 -ஆம் தேதி  நடைபெறும்: சிபிஎஸ்சி அறிவிப்பு!

புதுதில்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கையானது 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுகளை மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அதன்படி கடந்த ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு இடையே நாடு முழுவதும் நீட் தேர்வு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. 

பின்னர் இவ்வாண்டு நீட் தேர்வு தொடர்பான விவாதங்கள் எழுந்த பொழுது முதலில் மாநில பாடத் திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடைபெறும் என்று பேச்சுக்கள் எழுந்தது. பின்னர் அதனை மறுத்து சிபிஎஸ்சி அறிவிடது விட்டது.

இந்நிலையில் திங்களன்று மதியம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் ஆகிய இரண்டு கல்வி நிலையங்களுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com