ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 40 பதுங்குமிடங்கள் அமைக்கும் பணி விரைவில் நிறைவு

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 40 பதுங்குமிடங்கள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று அரசு அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் 40 பதுங்குமிடங்கள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும் என்று அரசு அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்த்தி வருவதால், பூமிக்கு அடியில் பதுங்குமிடங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பூஞ்ச் மாவட்ட வளர்ச்சி ஆணையர் தாரிக் அகமது சர்க்கார் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தாரிக் அகமது கூறியதாவது:
எல்லைப் பகுதி மக்களின் உயிர், உடைமைகளைக் காக்கும் வகையில் 628 குழு பதுங்குமிடங்களும், 1,320 தனிநபர்கள் பதுங்குமிடங்களும் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பூஞ்ச் மாவட்டத்தில் 40 குழு பதுங்குமிடங்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தக் குழு பதுங்குமிடங்களில் 30 முதல் 35 பேர் வரை ஒரே நேரத்தில் தங்க முடியும். இது தவிர பெண்களுக்கு என்று தனியாக கழிவறை, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் பதுங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையொட்டிய சர்வதேச எல்லையிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com