பீமா-கோரேகான் கலவரம் ஹிந்து அமைப்புத் தலைவரை பாதுகாக்கிறது மத்திய அரசு: அம்பேத்கர் பேரன்

பீமா-கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய ஹிந்து அமைப்புத் தலைவர் சம்பாஜி பிடேவை பாதுகாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பேரனும்,
பீமா-கோரேகான் கலவரம் ஹிந்து அமைப்புத் தலைவரை பாதுகாக்கிறது மத்திய அரசு: அம்பேத்கர் பேரன்

பீமா-கோரேகான் கலவரத்தில் தொடர்புடைய ஹிந்து அமைப்புத் தலைவர் சம்பாஜி பிடேவை பாதுகாக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாக மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பேரனும், தலித் சமூக தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பீமா-கோரேகான் கலவரம் தொடர்பாக சம்பாஜி பிடே, மிலிந்த் ஏக்போத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் 2 பேரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
சம்பாஜி பிடே கைது செய்யப்பட மாட்டார் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியளித்திருப்பதாக முன்பு தகவல் கிடைத்தது. ஆனால், தற்போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து, பிடேவை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
சம்பாஜி பிடேவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி அவர் கைது செய்யப்படவில்லையெனில், பிடே இந்தியாவின் ஹபீஸ் சயீதாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது என்றார் பிரகாஷ் அம்பேத்கர்.
செய்தியாளர்களிடம் பேசியபோது 2 விடியோக்களை பிரகாஷ் அம்பேத்கர் வெளியிட்டார். அதில் ஒரு விடியோவில் பிடே பேசுகையில், 2014-ஆம் ஆண்டு செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த்தும்போது, காவி நிறத்திலான தலைப்பாகையை அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாக தெரிவிக்கிறார். மற்றொரு விடியோவில், சம்பாஜி பிடேவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் உள்ள பீமா-கோரேகான் பகுதியில் தலித்துகளுக்கும் மற்றாùரு பிரிவினருக்கும் இடையே அண்மையில் கலவரம் மூண்டது. இக்கலவரத்தில் அரசு சொத்துக்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரத்தை சிவ் பிரதிஷ்டான் ஹிந்துஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பிடே தூண்டி விட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டை பிடே மறுத்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com