ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்! 

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்: மத்திய அரசு மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்! 

ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய அரசு மீது காங்கிரசினைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் அரசில் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராகப் பணிபுரிந்தவர் ஜெய்ராம் ரமேஷ். இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆதார் அட்டை திட்டத்தினை செயல்படுத்திவரும் விதத்தினைக் கடுமையாக விமர்சிததுள்ளார்.  அப்பொழுது அவர் கூறியதாவது:

ஆதார் என்பது மிக மோசமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த யோசனையாகும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முதலில் கொண்டு வந்த ஆதார் திட்டமானது சமூக நலத்திட்டங்களின் பயன்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக மட்டுமே திட்டமிடப்பட்டது.  இதனை அடிப்படையாக வைத்து இத்தகைய சமூக நலத்திட்டங்களில் நிலவும் மோசடிகளை ஒழிக்கலாம் என்றும், போலி பயனாளர்களை களையெடுக்கலாம் என்றும் திட்டமிட்டோம்.

ஆனால் ஆதார் அட்டை என்பது தற்பொழுது விமான பயணச்சீட்டுகள் வாங்கவும், வங்கிக் கணக்குகள் துவங்கவும் மற்றும் அலைபேசி இணைப்புகள் வைத்திருக்கவும் தேவைப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் முட்டாள்தனமானது.

ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் சிலர் ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை; சிலர் முதியோர் ஓய்வூதியம் பெற இயலவில்லை. ஆதார் அட்டையால் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரானது மக்களை சாகத் தூண்டுகிறது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com