இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரத்தில் ஜிஎஸ்டி நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, இந்த நாளானது ஜிஎஸ்டி தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சிறப்பான நாளில் இந்திய மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு மற்றும் ஒரே இந்தியா என்ற ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஜிஎஸ்டி, இந்தியா பொருளாதாரத்தில் நேர்மைறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி-யின் மூலம் வளர்ச்சி, எளிமை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒழுங்குமுறையை மேம்படுத்தியுள்ளது, உற்பத்தியை அதிகரித்துள்ளது. புதிய தொழில் தொடங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளது. இதனால் சிறு, குறு தொழில்முறை அதிக பயனடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com