கேரள பல்கலை., மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு 

கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
கேரள பல்கலை., மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு 

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

கேரளாவில் ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சமீபத்தில் திருநங்கைகள் தொடர்பான சமூக மற்றும் பொருளாதர ரீதியிலான ஆய்வு ஒன்றை நடத்தியது.

இதில் 20.35 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு இன்றியும், 30 சதவீதத்தினர் சுய வேலைவாய்ப்புடனும் உள்ளனர் என்றும், அதற்கு காரணமான கல்வித்தகுதி குறைபாடு பற்றியும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த உறுப்புக் கல்லூரிகளில் திருநங்கை மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

இதன்படி  அனைத்து பாடப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்காக 2 கூடுதல் இடங்களை ஒதுக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டு இடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என்றும் கேரள மாநில மேல்நிலை கல்வி துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com