நிர்பயா வழக்கின் தீர்ப்பு அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடியினால் எடுக்கப்பட்டது: வழக்கறிஞர் கருத்து

நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடிக்கு உட்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
நிர்பயா வழக்கின் தீர்ப்பு அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடியினால் எடுக்கப்பட்டது: வழக்கறிஞர் கருத்து

நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்றம் அரசியல், சமூகம் மற்றும் ஊடகங்களின் நெருக்கடிக்கு உட்பட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

தில்லியில் கடந்த 2012-இல் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி பாலியல் வன்புறுத்தலுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த குற்றச்செயலுக்கு காரணமான 4 குற்றவாளிகள் முகேஷ் (29), பவன் குமார் குப்தா (22), வினய் சர்மா (23), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை  கடந்த ஆண்டு மே-5 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இதற்கிடையில், இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளி ராம் சிங் தில்லி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சிறார் குற்றவாளி கூர்நோக்கு இல்லத்திருந்து 3 ஆண்டுகள் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, உச்சநீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு முகேஷ், பவன் மற்றும் வினய் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அக்ஷய் குமார் சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மே-4 ஆம் தேதி விசாரணையை முடித்து தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 

இந்நிலையில், திங்கள்கிழமை இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கியது. அந்த தீர்ப்பில், குற்றவாளிகளுக்கு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், அந்த 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.      

இந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஏபி சிங் கூறுகையில், 

"இந்த முடிவு சமூகம், அரசியல் மற்றும் ஊடக நெருக்கடிகளுக்கு உட்பட்டே எடுக்கப்பட்டது. அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இந்த தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அக்ஷய் குமார் சிங் இதுவரை சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. விரைவில் அந்த மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். அவருக்கு சில குடும்ப பிரச்னைகள் உள்ளது. அதனால், அவரால் இன்று (திங்கள்கிழமை) வர முடியவில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com