அதிகாரிகள் வெளிப்படையாகவே எனது உத்தரவை மீறுகின்றனர்: கேஜரிவால் குற்றச்சாட்டு

அதிகாரிகள் தனது உத்தரவை வெளிப்படையாகவே மீறுவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் வெளிப்படையாகவே எனது உத்தரவை மீறுகின்றனர்: கேஜரிவால் குற்றச்சாட்டு

அதிகாரிகள் தனது உத்தரவை வெளிப்படையாகவே மீறுவதாக தில்லி முதல்வர் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் நடைபெற்று வந்த அதிகார மோதலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்து முற்றுப்புள்ளி வைத்தது. இதனால், தில்லி அரசில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பிரச்சனை இன்னும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேஜரிவால் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

"தில்லி அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு வெளிப்படையாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் முதல்வர் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் வெளிப்படையாக பின்பற்ற மறுப்பதை இதுவரை கேட்டதில்லை. இதற்காக தான் பாஜக, அதிகாரிகளுக்கான அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்புகிறது. 

ரேஷன் பொருட்களை மக்களிடம் நேரடியாக வீட்டுக்கே சென்று கொடுப்பதை பாஜக வெட்கமின்றி தடுப்பதை ஒட்டுமொத்த தில்லியும் கவனிக்க வேண்டும். அடுத்த முறை வாக்களிக்க செல்லும் போது இதனை நினைவில் கொள்ளுங்கள்" என்றார். 

தில்லியின் உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை ஆணையர் கூறியதை குறித்து செய்தி வெளியானது.  

அது தொடர்பான செய்தியை குறிப்பிட்டு கேஜரிவால் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், 

"அதிகாரிகள் வேலை செய்ய வேண்டாம் என்ற உத்தரவு எங்கிருந்து வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இது மக்களுக்கும்,  மத்திய அரசுக்கும் இடையிலான நேரடி சண்டை. தில்லி மக்களுக்காக எனது போராட்டத்தை தொடருவேன். மக்கள் வெற்றி பெறுவார்கள்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com