ஆடிப்பாடி உழைக்கணும்.. திருடுவதற்கு முன் குத்தாட்டம் போட்ட தில்லி திருடன்!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது.. இந்த விடியோவைப் பார்த்த பிறகு இந்த பாடலை எப்படி பாடுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
ஆடிப்பாடி உழைக்கணும்.. திருடுவதற்கு முன் குத்தாட்டம் போட்ட தில்லி திருடன்!

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது.. இந்த விடியோவைப் பார்த்த பிறகு இந்த பாடலை எப்படி பாடுவார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

திருடுவதற்கு திட்டம் போடலாம்... ஆனால் திருடுவதற்கு முன்பு இப்படி திருடன் குத்தாட்டம் போடுவான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? இதோ ஒரு சிசிடிவி காட்சி அதனை நம்பவைக்கிறது.

தில்லியின் சாவ்ரி பஜார் பகுதியில் கடந்த 10ம் தேதி இரவு சுமார் 4 கடைகளின் ஷட்டர்களை உடைத்த கொள்ளையர்கள், அதில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளைப் போன பொருட்களின் மதிப்பு பல லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்த விசாரணை நடத்திய காவல்துறைக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்தது.

பொதுவாக திருடுவதற்கு முன்பு, எப்படி திருடுவது, தப்பிப்பது, யாரேனும் வந்தால் என்ன செய்வது என்ற பரபரப்புடன் திருடர்கள் இருப்பதை பார்த்திருப்பார்கள். ஆனால், தில்லியில் கடைகளை உடைத்துத் திருடிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவன், தான் திருட வந்த இடத்தில் ஆடிப் பாடி ஒரு குத்தாட்டமே போட்டுள்ளான்.

கும்பலாக திருட வந்த கொள்ளையர்களில் ஒருவன் திருட வந்த சாலைக்குள் நுழைந்து கை, கால்களை ஆட்டி நடனமாடுகிறான். பிறகு அவனது தோழர்கள் வந்ததும் கடையில் கொள்ளையடிக்கச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 

இதனைப் பார்ப்பவர்கள் கொள்ளையன் கூட அவன் செய்ற வேலையை ரொம்ப மகிழ்ச்சியாகத்தான்  செய்றான்பா என்றும், ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்புத் தெரியாது என்பதை இவிக தான் ஃபாலோ பண்றாங்கப்பான்னும் சொல்லலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com