ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை: நாடாளுமன்றத்தில் மீண்டும் எழுப்ப தெலுங்கு தேசம் முடிவு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்ப தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் எழுப்ப தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தங்கள் கோரிக்கைக்கு மற்ற எதிரிக்கட்சிகளிடம் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு திரட்டி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. ஆனால் மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து மத்தியில் ஆளும் கூட்டணி அரசிலிருந்து தெலுங்குதேசம் கட்சி விலகிக்கொண்டது. இதைத்தொடர்ந்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே இக்கோரிக்கையை எழுப்பியது. தற்போது ஜூலை 18-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் மீண்டும் தனது கோரிக்கையை எழுப்ப தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது. ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடந்த கூட்டத்தொடரின்போது எழுப்பின. இதைத் தொடர்ந்து அந்த கூட்டத்தொடரில் அமளி, அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முறையாக செயல்படாமல் முடிவுற்றன.
இந்த நிலையில் தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததை அடுத்து நடைபெற உள்ள மழைக்காலத் தொடரில் அக்கோரிக்கையை மீண்டும் எழுப்பப்போவதாகவும் அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் தெலுங்குதேசம் வலியுறுத்தி வருவதாகவும் மூத்த அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அளித்துவந்த ஆதரவு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகளிடம் தெலுங்குதேசம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த உதவிடுங்கள் என்று மக்களவûத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி தனது கோரிக்கையை வலியுறுத்தி அவையில் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது செல்பட வேண்டிய உத்திகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும்தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com