ஒடிஸா: மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த மாவட்டத்தில் புதிய பாலம்: 18-இல் திறந்துவைக்கிறார் பட்நாயக்

ஒடிஸாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மல்கான்கிரி மாவட்டத்தில் கிராமங்களை நகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை, முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிஸாவில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த மல்கான்கிரி மாவட்டத்தில் கிராமங்களை நகர்ப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாகக் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை, முதல்வர் நவீன் பட்நாயக் ஜூலை 18-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளார்.
இதுகுறித்து சித்ரகொண்டா தொகுதி பிஜூ ஜனதா தள எம்எல்ஏ தம்பாரு சிசா கூறியதாவது: ஜன்பை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 912 மீட்டர் நீளமுள்ள 'குருபிரியா' என்ற பாலம், வரும் 18-ஆம் தேதி திறந்துவைக்கப்பட உள்ளது. 
இப்பாலமானது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த மல்கான்கிரி மாவட்டத்தில் எளிதில் அணுக முடியாத 9 கிராமப் பஞ்சாயத்துகளை அண்டை நகரங்களுடன் இணைக்கிறது. இதன்மூலம் அப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, 1982-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜே.பி.பட்நாயக் முயற்சியால் இப்பகுதியில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் இத்திட்டம் தாமதமடைந்து வந்தது. 
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டு முதல்வர் நவீன் பட்நாயக் மீண்டும் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, பாலத்தின் கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com