சின்னங்களை ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது: இரட்டை இலைச் சின்னம் வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது என்று இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது என்று இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் வழக்கு தொடர்பான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்துள்ளது. 
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி முன்வைத்த வாதம்:
சின்னங்களை ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. வேறு யாருக்கும் சின்னங்களை ஒதுக்கும் அதிகாரம் இல்லை. அனைத்துவித அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் இரட்டை இலைச் சின்னத்தை எங்கள் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவை, மக்களவையில் மட்டுமின்றி கட்சி உறுப்பினர்களின் அளவிலும் பெரும்பான்மை எங்கள் அணியிடமே உள்ளது. அதிமுகவில் சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டுவிட்டார் என்று அவர் வாதிட்டார். இதைத் தொடர்ந்து வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com