மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாபெரும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை:  சீதாராம் யெச்சூரி

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாபெரும் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாபெரும் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை:  சீதாராம் யெச்சூரி

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மாபெரும் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே மாபெரும் கூட்டணிக்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஏனெனில், இந்திய பன்முகத்தன்மை கொண்ட ஓர் நாடு.
1996-இல் ஐக்கிய முன்னணி ஆட்சியமைத்தது, 2004-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது போன்ற ஒரு சூழ்நிலையே இந்த முறையும் காணப்படும். தேர்தலுக்குப் பிறகு ஓர் மாற்று மதச்சார்பற்ற ஜனநாயக அரசு அமையலாம்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அளவில் இருக்கும் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணையும். எனினும், அந்தக் கூட்டணியின் பெயரைக் கூற இயலாது. மக்களுக்கு எதிரான இந்த அரசை தோற்கடிக்க தொண்டர்களும், மக்களும் விரும்புவதே எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கிறது.
மாற்று மதச்சார்பற்ற முன்னணி அமைந்தால், கடந்த 1989, 1996, 2004-ஆம் ஆண்டுகளைப் போல, எங்களது கட்சி வெளியிலிருந்து மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.
எதிர்க்கட்சிகள் முன்னணியில் திரிணமூல் காங்கிரஸ் இணையும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதில் அங்கம் வகிக்குமா?' என்ற கேள்விக்கு யெச்சூரி பதிலளித்ததாவது:
திரிணமூல் காங்கிரஸ், பாஜகவுடன் ரகசிய உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடும் நம்பகத்தன்மை திரிணமூல் காங்கிரஸுக்கு கிடையாது.
இந்தியாவைக் காப்பாற்ற மோடி அரசையும், மேற்கு வங்கத்தை காப்பாற்ற திரிணமூல் காங்கிரஸ் அரசையும் வெளியேற்றுவோம் என்பதே எங்களது நிலைப்பாடு. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு இடம் கிடைத்ததற்கு முழு பொறுப்பு திரிணமூல் காங்கிரஸ் தான்.
திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வருவார்கள் என்று கூறினால் அதைவிட பெரிய நகைச்சுவை கிடையாது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தலின்போது ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டதை நாடே அறியும். பாஜகவுக்கு எதிரான தீவிரமான விவகாரங்களின்போது திரிணமூல் காங்கிரஸ் அமைதி காக்கிறது. அதற்கு பதிலாக, சாரதா ஊழல் வழக்கு விசாரணையை கிடப்பில் போடச் செய்து பாஜக அக்கட்சிக்கு உதவுகிறது என்று யெச்சூரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com