இலங்கை பிரதமருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு: மீனவர் விவகாரம் குறித்து ஆலோசனை

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கொழும்பில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
இலங்கை பிரதமருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு: மீனவர் விவகாரம் குறித்து ஆலோசனை

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கொழும்பில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தலைமையிலான இந்தியக் குழுவினர், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள், தலைநகர் கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
அப்போது, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது, இந்தியா - இலங்கை இடையே திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கே சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிராந்திய அளவிலான நல்லுறவுகள் அவசியமாகும். அதன்படி, இந்தியாவுடனான எங்களது உறவை தொடர்ந்து வலுப்படுத்துவோம்' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்பாக வெளியுறவு விவகாரங்களுக்கான இந்திய நாடாளுன்ற குழு அண்மையில் கவலை தெரிவித்திருந்தது.
மேலும், சீனா-இலங்கை இடையே நெருக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயம்' என்றும், இந்தியா - இலங்கை இடையிலான கடல் எல்லை ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்' என்றும் அக்குழு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com