கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளன.

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ளன.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் அதிகபட்ச நீர்மட்டமான 124.80 அடியில் வெள்ளிக்கிழமை 121.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 37,950 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 3,916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
கபினி அணைக்கு வரும் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 2,282 அடியாக உள்ளது. இன்னும் சில நாள்களில் அதன் அதிகபட்ச உயரமான 2284 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு விநாடிக்கு மொத்தம் 42,950 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இரு அணைகளில் இருந்து விநாடிக்கு 48,916 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து சனிக்கிழமை கூடுதலாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. 
இதனிடையே, 4 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் முழுமையாக நிரம்பவுள்ளன. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிகழாண்டில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் முழுமையாக சென்றடையும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com