பணமதிப்பிழப்பு சமயத்தில் கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள்: ஊழியர்களை அதிர வைத்த எஸ்பிஐ நிர்வாகம்

பணமதிப்பிழப்பு சமயத்தில் கூடுதல் வேலை நேரத்திற்காக கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள் என்ற எஸ்பிஐ நிர்வாகத்தின் அறிக்கையால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு சமயத்தில் கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள்: ஊழியர்களை அதிர வைத்த எஸ்பிஐ நிர்வாகம்

புது தில்லி: பணமதிப்பிழப்பு சமயத்தில் கூடுதல் வேலை நேரத்திற்காக கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள் என்ற எஸ்பிஐ நிர்வாகத்தின் அறிக்கையால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

தற்பொழுது நாடு முழுவதும் எஸ்பிஐ என்ற ஒரே பெயரால் அறியப்படும் ஸ்டேட் வங்கி குழுமமானது இதற்கு முன்னர் ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஹைதராபாத், மைசூர், திருவாங்கூர் மற்றும் பிகானீர் & ஜெய்ப்பூர் எனப் பல்வேறு தனிப் பெயர்களில்  இயங்கி வந்தது. அப்பொழுது அவை எஸ்பிஐயின் 'உறுப்பு வங்கிகள்' என்ற பெயரில் அழைக்கப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் தாய் வங்கியான எஸ்பிஐயுடன் 01.04.2017 அன்று இணைக்கப்பட்டன.   

முன்னதாக இதற்கு முன்னதாக கடந்த 08.11.2016 அன்று இரவு நாடு முழுவதும் ரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். பின்னர் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள பழைய நோட்டுகளை ஒப்படைக்கவும், புதிய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் நாடு முழுவதும் வங்கிகள் வழியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்ப்பட்டன.

அதன்படி 14.11.2016 முதல் 30.12.16 வரை நாடு முழுவதும் வங்கிகள் தங்களது வழக்கமான வேலை நேரத்தினை தாண்டி, கூடுதல் நேரத்திலும் வேலை செய்தன. அதிலும் இந்த எஸ்பிஐயின் முன்னாள் உறுப்பு வங்கிகளைச் சேர்ந்த 70000-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் அந்த சமயத்தில் வேலை செய்தனர்.

அந்த சமயத்தில் இந்த ஊழியர்களுக்கு 'வழக்கமில்லாத முறையில்' குறிப்பிட்ட வங்கி நிர்வாகங்கள் மூலம்  நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன.வங்கி அலுவலர்களின் பணித் தகுதிக்கு ஏற்ப ரூ.15000 முதல் ரூ.30000 வரை நிவாரணமாக வழங்கப்பட்டன.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு சமயத்தில் கூடுதல் வேலை நேரத்திற்காக கொடுக்கப்பட்ட பண நிவாரணத்தை திரும்பக் கொடுங்கள் என்ற எஸ்பிஐ நிர்வாகத்தின் அறிக்கையால் வங்கி ஊழியர்கள் தற்பொழுது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்படுவதாவது:

ஊழியர்களுக்கான இந்த பண நிவாரணமானது உறுப்பு வங்கிகளின் இணைப்புக்கு முன்னரே வழங்கப்பட்டதாகும். எனவே இதுதொடர்பான எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் எங்களுக்கு கிடையாது.

எனவே எந்த சூழ்நிலையில் இத்தகைய பண நிவாரணம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யுமாறும், தவறான வகையில் பண நிவாரணம் அளிக்கப்பட்டிருந்தால், அதனை திரும்பப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது நியாயமற்ற நடவடிக்கை என்றும், எங்களுக்கு வழங்கப்பட்ட தொகை என்பது ஏதோ கருணை அடிப்படையிலோ அல்லது ஊக்கத் தொகையோ அல்ல என்று அவர்கள் கூறியுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com