பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை நிகழ்ந்தால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மக்களிடையே அச்சம் நிலவினால் அதனை தீர்க்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தைக் கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com