எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் கூறியது? சோனியா ஆவேசம்

மத்தியில் ஆட்சி அமைக்க எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் கூறியது என காங்கிரஸ் தலைவர் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் கூறியது? சோனியா ஆவேசம்

மத்தியில் ஆட்சி அமைக்க எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் கூறியது என காங்கிரஸ் தலைவர் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நியமன உறுப்பினர்களான நடனக் கலைஞர் சோனல் மாண்சிங், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிலை வடிவமைப்பாளர் ரகுநாத் மோஹபத்ரா மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் கூட்டத் தொடர் தொடங்கியவுடன் பதவியேற்றுக்கொண்டனர்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அக்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் துவங்கியவுடன், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும், தினசரி ஏற்படும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்று வரும் இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிர்தியா சிந்தியா தெரிவித்தார். அதே வேளையில் சமாஜவாதி கட்சியும் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. 

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதையடுத்து ஜூலை 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அப்போது, மத்தியில் ஆட்சி அமைக்க எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று யார் கூறியது என காங்கிரஸ் தலைவர் சோனியா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியதாவது, சோனியாவின் இந்த அளவு கடந்த நம்பிக்கையால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஜூலை 20-ஆம் தேதி பாஜக நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிக்கும். அப்போது எங்களின் பலம் எதிர்கட்சிகளுக்கு தெரியவரும் என்றார்.

மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கூட காங்கிரஸ் கட்சி இதேபோன்றுதான் அராஜகமாக செயல்பட்டது. ஆனால், அதற்கான விளைவுகளை பின்னர் சந்தித்தது. இந்தியர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். மக்களின் நம்பிக்கை மோடிக்கு எப்போதும் உண்டு. எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com