குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக பாகிஸ்தான் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்துள்ளது. 
குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் 2-ஆவது முறையாக பாகிஸ்தான் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்துள்ளது. 
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டின்பேரில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கடந்த ஆண்டு மார்ச்சில் குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்திய கடற்படை பணியில் இருந்து ஓய்வு பெற்றவரான குல்பூஷண், தனது தொழில்நிமித்தமாக ஈரான் சென்றபோது அவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கடத்தி கைது செய்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டது. இதையடுத்து, ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இதனிடையே, ஜாதவுக்கு தூதரக ரீதியிலான உதவிகளை வழங்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், ஜாதவ் திரட்டிய உளவுத் தகவல்களைப் பெறுவதற்காகவே, அவரை அணுக இந்திய தூதரக அதிகாரிகள் முயல்வதாக கூறி, பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதிக்குள் இரண்டாம்கட்ட எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்யும்படி, பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, 400 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ பதிலை சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தாக்கல் செய்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் தெரிவித்தார். மேலும், இந்தியா சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் உரிய பதில் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்கட்டமாக எழுத்துப்பூர்வ பதிலை பாகிஸ்தான் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com