மோடி குறித்து தெலுங்கு தேசம் எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து: நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
மோடி குறித்து தெலுங்கு தேசம் எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து: நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வெள்ளிக்கிழமை விவாதத்தைத் தொடங்கிவைத்து, தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா பேசினார். தனது பேச்சின் இறுதியாக, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது, ஜனநாயக விரோதமான, அறிவியல்பூர்வமற்ற நடவடிக்கை' என்று குறிப்பிட்டார். 
அப்போது, மற்றொரு தெலுங்கு தேசம் எம்.பி.யான நரமல்லி சிவபிரசாத், தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று, பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதற்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் பிரதமருக்கு எதிராக அதுபோன்ற வார்த்தைகளை எப்படி பயன்படுத்தலாம்?' என்று கேள்வியெழுப்பிய நிர்மலா சீதாராமன், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் உள்பட பாஜக எம்.பி.க்கள் பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்வதாகவும், தேவைப்பட்டால் அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் சுமித்ரா மகாஜன் உறுதியளித்தார். சிவபிரசாத்தின் கருத்துக்கு, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com