ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடக்கம் 

தில்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடக்கம் 

புது தில்லி: தில்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அக்கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்குப் பதிலாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.

அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் 51 உறுப்பினர்கள் அடங்கிய புதிய மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி  ஜூலை 17-ம் தேதிஎன்று நியமித்தார். இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த காரிய கமிட்டியின் முதல் ஆலோசனை கூட்டம் தில்லியில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com