அசாம் குடிமக்கள் பட்டியலில் விடுபட்ட 40 லட்சம் பேர்.. மம்தா சாடல், ராஜ்நாத் விளக்கம்

அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார். 
அசாம் குடிமக்கள் பட்டியலில் விடுபட்ட 40 லட்சம் பேர்.. மம்தா சாடல், ராஜ்நாத் விளக்கம்

அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார். 

அசாமில் கணிசமான அளவில் வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வசிப்பதாகத் தொடர்ந்து எண்ணிக்கை சார்ந்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து குடிமக்களுக்கான தேசிய  பதிவேடு ஒன்றை உருவாக்குவது என்று தீர்மனிக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அசாம் மாநில குடிமக்கள் வரைவுப் பதிவேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்த வரைவுப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 40 லட்சம் பெயர்கள் விடுபட்ட விவகாரம் குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். இந்த விவகாரம் குறித்து அவர் பேசுகையில், 

"குடும்ப பெயர்களின் அடிப்படையில் மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு அரசு முயல்கிறதா? சூழ்ச்சி மூலம் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். தங்களது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக்கப்படுவது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இது மேற்கு வங்கம் மற்றும் பிகார் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம். இதன் விளைவு எங்களது மாநிலத்திலும் பிரதிபலிக்கும்.

விடுபட்ட 40 லட்ச மக்கள் எங்கே செல்வார்கள்? இதற்கான மறுவாழ்வு நிகழ்வு ஏதும் மத்திய அரசிடம் உள்ளதா? இதனால், மேற்கு வங்க மாநிலமும் பாதிக்கும். இது பாஜகவின் வாக்கு அரசியல். உள்துறை அமைச்சர் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.   

திரிணமூல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசாமுக்கு செல்கின்றனர். அவசியப்பட்டால் நானும் அசாமுக்கு செல்வேன்" என்றார். 

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் பூகம்பமாக வெடித்தது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.  

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், " இந்த வரைவுப் பதிவேடு வெளியீடு விவகாரத்தில் மத்திய அரசு ஏதும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே அனைத்தும் நடக்கிறது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. 

இந்த பதிவேட்டில் தங்களது பெயர் இடம்பெற வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அவர்கள் அதற்காக முறையிடலாம். எத்தனை முறையிடலாம், நிராகரிக்கப்படலாம் என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும். இது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால் அவசியமில்லாமல் அரசியலாக்கப்பட வேண்டாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com