ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் இல்லை: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பொய் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் இல்லை: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக பொய் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப் படைக்கு ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அந்த ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  ஆனால், தேசப் பாதுகாப்பு நலன் கருதி அந்த ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது என்று கூறி மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனை குறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

இந்திய பாதுகாப்பு அம்சத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. அனைத்து விதமான ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அடிப்படை ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன என்றார். 

முன்னதாக, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். அதில், ஒரு போர் விமானத்தின் விலையை ரூ.570 கோடியாக முந்தைய காங்கிரஸ் அரசு இறுதி செய்திருந்தது. அந்த விமானத்தை ரூ.1,319 கோடிக்கு கத்தார் அரசு கொள்முதல் செய்துள்ளது.

ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசோ, அந்த விமானத்தை ரூ.1,670 கோடிக்கு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதாவது, ஒரு விமானத்தை கூடுதலாக ரூ.1,100 கோடி கொடுத்து மத்திய அரசு கொள்முதல் செய்யவுள்ளது. இதனால், அரசுக்கு 36,000 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இது, மத்திய பொது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் 10 சதவீதத் தொகையாகும். ஆனால், அதே வேளையில், மத்திய அரசிடம் இருந்து ராணுவம் கூடுதல் நிதி கோருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com