ஜம்மு-காஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி அளிக்கும் இஃப்தார் விருந்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.
ஜம்மு-காஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு

புது தில்லி: ரமலான் மாதத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 2 தினங்களும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வியாழக்கிழமை செல்லவுள்ளார். அங்கு அவருக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி, இஃப்தார் விருந்து அளிக்கவுள்ளார். பின்னர் அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா, காவல்துறை உயரதிகாரிகள், துணை ராணுவப் படை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

அப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு கல்வீச்சு சம்பவங்கள், பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல் ஆகியவை குறித்து விவாதிக்கவுள்ளார். அப்போது பயங்கரவாதிகளுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com