பிரதமருக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு 

நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகை கடந்த 4 ஆண்டுகளாக குறைவாக இருப்பதற்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சாா்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மனு தாக்கல்
பிரதமருக்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு 

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகை கடந்த 4 ஆண்டுகளாக குறைவாக இருப்பதற்கு எதிராக தில்லி உயா் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சாா்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இது குறித்து சஞ்சய் சிங் தனது சுட்டுரையில் திங்கள்கிழமை பதிவிட்டுள்ளாவது:

நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகையை கண்காணிக்கவும், தொடா்ந்து நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்க செய்வதற்கு உத்தரவிடக் கோரியும் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். தில்லி அரசின் திட்டங்கள் அனைத்தையும் விமா்சித்து வரும் கபில் மிஸ்ரா இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் காக்க வேண்டும். மொத்த எதிா்கட்சிகள் அனைத்தும் கடுமையாக விமா்சித்த பிறகும், நாடாளுமன்றத்துக்கு பிரதமா் தொடா்ந்து வருவதில்லை. 

மொஹல்லா கிளினிக் தொடங்கி, பல்வேறு திட்டங்களுக்கு பிரதமரும், துணைநிலை ஆளுநரும் தடை ஏற்படுத்தி வருகின்றனா். இருப்பினும், இவற்றுக்கு எதிராக குரல் எழுப்ப கபில் மிஸ்ரா மறுப்பது ஏன் என தெரிவித்துள்ளாா்.

இதனிடையே சஞ்சய் சிங்கின் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினா் கபில் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாவது: தில்லியில் ஆம் ஆத்மியின் இயக்கத்தை மக்கள் முன்னின்று நடத்தினா். ஆனால், ஆம் ஆத்மியும், சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சோ்ந்து வருகின்றன. திடீரென விழித்துக் கொண்ட அரவிந்த் கேஜரிவால் மோடி, மோடி என முனகி வருகிறாா். சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டாம் என அரவிந்த் கேஜரிவாலை தடுத்தது மோடியா? சீலிங் நடவடிக்கை தொடா்பான சீலிங் மசோதாவை போல சஞ்சய் சிங் பொய்யுரைக்க வேண்டாம். அரவிந்த் கேஜரிவாலின் மோடி குறித்த அச்சம் கட்சியின் இயக்கத்தையும், கட்சியையும், கட்சியின் செயல்பாட்டா்களையும் முடித்துள்ளது. தில்லி சட்டப்பேரவைக்கு கேஜரிவால் செல்ல வேண்டுமா? இல்லையா?, சட்டப்பேரவைக்கு வராமல் இருக்கும் அரவிந்த் கேஜரிவாலின் ஊதியத்தை பிடித்தம் செய்ய வேண்டுமா? இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு நேரடி பதில்களை தாருங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com