இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி தொடரும்: அருண் ஜேட்லி

சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி தொடரும்: அருண் ஜேட்லி

சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தொடரும் என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார மேம்பாடு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அருண் ஜேட்லி திங்கள்கிழமை பதிவிட்டதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். சா்வதேச அளவில் வேகமாக வளா்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நமது நாடு உருவெடுத்துள்ளது. இந்த வளா்ச்சி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.

அண்மை காலத்தில் ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல், திவால் சட்ட மசோதா போன்ற நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. சிலா் இதனை கடுமையாக எதிர்த்ததுடன் விமா்சித்தும் வருகின்றனர். 

நாட்டின் பொருளாதார வளா்ச்சி 2 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துவிடும் என்று அவா்கள் எதிர்பார்த்தனா். ஆனால், பொருளாதார வளா்ச்சி அந்த அளவுக்கு குறைந்துவிடவில்லை என்பதன் மூலம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானவை என்பது உறுதியாகியுள்ளது.

2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக உள்ளது. 

இதன் மூலம் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி எதிர்காலத்தில் தொடா்ந்து சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. சா்வதேச பொருளாதார வல்லுநா்கள் பலருடைய கணிப்பு.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலையில் விட்டுச் சென்றது. அதனை பாஜக தலைமையிலான அரசுதான் சீா்படுத்தி வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்துள்ளது. 

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சா் (ப.சிதம்பரம்) ஒருவா் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில் இது பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கான யோசனையாகும். இந்தியாவை மீளமுடியாத கடன் சுமைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அவரது உள்நோக்கமாக உள்ளது. 

நாட்டின் நிதிக்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுமே இந்த அரசு மேற்கொள்ளும் என்று ஜேட்லி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com