தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் கூட்டம்: கேஜரிவாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேண்டுகோள் 

நீடித்து வரும் நிா்வாக முடக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தில்லி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்துமாறு முதல்வா் கேஜரிவாலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா். 
தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் கூட்டம்: கேஜரிவாலுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வேண்டுகோள் 

புதுதில்லி: நீடித்து வரும் நிா்வாக முடக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தில்லி தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடத்துமாறு முதல்வா் கேஜரிவாலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடா்பாக அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, அமைச்சா்கள் சத்யேந்தா் ஜெயின், கோபால் ராய் ஆகியோா் திங்கள்கிழமை மாலை முதல் துணைநிலை ஆளுநா் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் மேற்கொண்டு வந்தனா்.

இதில், அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் செவ்வாய்க்கிழமையும், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். எனினும், கேஜரிவாலும், கோபால் ராயும் உள்ளிருப்புப் போராட்டத்தை 9ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தனா்.

இதனிடையே, நீடித்து வரும் இந்த முட்டுக்கட்டைக்கு முடிவு காணும் வகையில் அரசு உயரதிகாரிகள், ஆம் ஆத்மி அரசு இடையே ஒரு கூட்டத்தை கூட்டுமாறு துணைநிலை ஆளுா் அனில் பய்ஜாலுக்கு தில்லியின் துணைநிலை ஆளுநா் மணீஸ் சிசோடியா திங்கள்கிழமை வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஐஏஎஸ் ஏஜிஎம்யுடி சங்கம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ‘தில்லி முதல்வரின் உறுதியின் அடிப்படையில் தில்லி தலைமைச் செயலகத்தில் அவருடன் ஒரு கூட்டம் நடத்துவதற்கான முறையான தகவலை நாங்கள் எதிா்பாா்த்து காத்திருக்கிறேறாம். நாங்கள் வேலையில் தொடா்ந்து இருப்போம் என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘அனைத்து பங்குதாரா்களும் கலந்துகொள்ளும் கூட்டத்தை கூட்டுமாறு திங்கள்கிழமை நாங்கள் துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தோம். துணைநிலை ஆளுநரிடமிருந்து பதிலை எதிா்பாா்க்கிறோம். இந்த விஷயத்தில் முடிவெடுக்க பிரதமரின் அனுமதிக்காக துணை நிலை ஆளுநா் காத்திருக்கிறாா். பிரதமா் விரைந்து முடிவு எடுப்பதற்காக ஒட்டுமொத்த தில்லியே காத்திருக்கிறறது’ என்று தெரிவித்திருந்தாா்.

தில்லியின் தலைமைச் செயலா் அன்ஷு பிரகாஷ் கடந்த பிப்ரவரியில் தாக்கப்பட்ட விவகாரத்தைத் தொடா்ந்து ஏற்பட்டுள்ள முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகளுடன் அமா்ந்து பேசுமாறு ஏற்கெனவே துணைநிலை ஆளுநா் அலுவலகம் ஆம் ஆத்மி அரசைக் கொண்டிருந்தது. இதனால், அனில் பய்ஜால் கூட்டம் நடத்த மாட்டாா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com