விவசாயிகளுடன் உரையாடினார் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?

பிரதமர் மோடி நரேந்திர மோடி செயலி மூலம் இந்தியாவின் 600 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இன்று (புதன்கிழமை) பேசினார்.
விவசாயிகளுடன் உரையாடினார் மோடி: என்ன சொன்னார் தெரியுமா?

கர்நாடகா, சிக்கிம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி விவசாயத்தின் சாதனைகள் மற்றும் சவால்கள் குறித்து உரையாடினார். 

அதில் அவர் மேலும் பேசியதாவது,

"விவசாயிகளின் முன்னேற்றத்தை அவர்களிடமே விட்டுவிட்டோம். அவர்களது முன்னேற்றத்துக்கு பெரிதளவு எதுவும் செய்யவில்லை. விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதுமையான தொழில்நுட்பங்களின் தேவை உள்ளது. இதனை மனதில் வைத்து எங்களது அரசு அவர்களது முன்னேற்றத்தை உறுதி செய்ய முயற்சித்து வருகிறது. அதற்கு அவர்களுடைய பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய இடைத்தரகர்களை நீக்க அரசு முயற்சித்து வருகிறது. 

2022-இல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க முயற்சி மேற்கொள்ளபப்படும். அதற்கான உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  

பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யவேண்டும். தானியங்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வருமானத்துக்கு கூடுதலாக ஒரு மாற்று வழியையும் உருவாக்க வேண்டும். 

மத்திய நிதியில் இருந்து 2 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. மீன்வளத்துறை 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. விலங்குகள் வேளாண்மை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

பயிர்களுக்கு சரியான விலை கிடைக்க, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை குறிப்பிட்ட பயிர்களுக்கு 1.5 முறை அதிகரிக்கும். 

2017-18 ஆண்டில் தானிய உற்பத்தி 280 மில்லியன டன் ஆகும். அதுவே 2010 முதல் 2014 வரை 250 மில்லியன் டன் உற்பத்தியாகும். பருப்புகள் மற்றும் தோட்டக்கலை முறையே 10 மற்றும் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 

விவசாய சாகுபாடியில் நாங்கள் பயிரிடுவது முன், பயிரிடுவது பின் மற்றும் சாகுபடி செய்யும் போது என அனைத்து செயல்முறைகளிலும் உதவ விரும்புகிறது. 

விவசாயிகளின் உற்பத்தியில் இடைத்தரகர்கள் லாபம் பார்க்காமல் இருக்க, அதற்கு சரியான விலை கிடைப்பதற்காக இ-நம் எனும் இணைய தளத்தை அரசு தொடங்கியுள்ளது

முன்பெல்லாம் உரத்தை பயன்படுத்துவதற்கு உரத்தை வாங்குபவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் வேப்பம் பூசிய யூரியா கிடைக்கிறது.  

விவசாயிகளின் சொட்டு நீர் பாசனத்தை நான் வரவேற்கிறேன். இது விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்னையை தீர்க்கும். ஒரு துளி பல பயிர் என்பது தான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.பிரதான் மந்திரி க்ரிஷி சின்சாய் யோஜனா எனும் சொட்டு நீர் பாசனம் நாடு முழுவதும் முடிவடைந்துள்ளது. இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் அமல்படுத்தப்படவுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com