நிலையான விலைக்கு எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை: தர்மேந்திர பிரதான் உறுதி

நிலையான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
நிலையான விலைக்கு எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை: தர்மேந்திர பிரதான் உறுதி

நிலையான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எரிவாயு தேவை அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே தொடர்ந்து இறக்குமதி செய்துகொண்டிருப்பதால் நிலையான எரிவாயு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எரிவாயு ஏற்றுமதி நாடுகளிடம் இந்திய தரப்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து கடந்த சில வருடங்களாகவே இந்தியா, கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதனை இம்முறை நடைபெறவுள்ள எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் கருத்தரங்கில் மீண்டும் வலியுறுத்த உள்ளது. ஏனெனில் இந்தியாவின் இந்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக அவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவின் குரல் அங்கே எடுபடவில்லை. ஆனால், தற்போது நமது பயன்பாடு அதிகம் உள்ளதால், நம்முடைய குரல் இவ்விவகாரத்தில் உயர்ந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

எரிவாயு பாதுகாப்பு தேவையான இந்த தருணத்தில், எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நடத்தும் இந்த கருத்தரங்கம், தடையில்லா எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com