காஷ்மீர் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?

காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநர் வோஹ்ராவின் பதவிக்காலம் 5 நாட்களில் நிறைவடைவதை அடுத்து அவர் நீட்டிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

என்என் வோஹ்ரா, குஜரால் பிரதமராக இருந்தபோது 1997-இல் மத்திய உள்துறை செயலாளராக என்என் வோஹ்ரா இருந்துள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டில் காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம் மற்றும் போலீஸ் அல்லாத ஒருவர் ஆளுநராக பொறுப்பேற்பது இதுதான் முதன்முறை. 

இதையடுத்து, 2013-ஆம் ஆண்டு அவருடைய பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அவருடைய பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இதற்கிடையில், பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நேற்று முறிந்ததை அடுத்து யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் இன்று ஒப்புதல் வழங்கியதை அடுத்து அங்கு தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது.

அதே சமயம் மிக முக்கியமான அமர்நாத் யாத்திரை வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த யாத்திரையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்த ஆண்டு பாதுகாப்பு நலனில் மத்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. 

ஏற்கனவே அங்கு ஆட்சி கவிழ்ந்துள்ளது. பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்க இருக்கிறது. அதனால் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் புதிய ஆளுநரை நியமித்து மேலும் மோசமான சூழலை மாறிவிடக்கூடாது என்ற குழப்பம் அங்கு நீடிக்கிறது. 

அதனால், காஷ்மீரின் அடுத்த நகர்வை நோக்கி இந்தியாவே காத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com