ஆளுநர் ஆட்சியில் காஷ்மீர் நிலைமை சீரடையும்: மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

ஆளுநர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை சீரடையும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

ஆளுநர் ஆட்சியின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை சீரடையும் என்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற யோகா தின விழாவில் மகேஷ் சர்மா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
2014-இல், அப்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அரசு அமைவதற்காக, மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் நாங்கள் கூட்டணி அமைத்தோம். அந்தக் கூட்டணியில் மூன்று ஆண்டுகள் இருந்தோம்.
தற்போது அரசியல் சூழ்நிலை மாறியுள்ளதால், ஆளுநர் ஆட்சிக்கான தருணம் ஏற்பட்டது. இந்த ஆட்சியில், மக்களின் உதவியுடன் பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட முடியும்.
ஆளுநர் ஆட்சியால் மாநிலத்தின் நிலைமையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் நம்பிக்கையுடன் பணியாற்ற தொடங்கியிருப்பதில் இருந்து இதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
காஷ்மீர் விவகாரத்தில் குறிப்பிட்ட ஓர் நாடு (பாகிஸ்தான்) என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகமே அறியும். தற்போது, ஒட்டுமொத்த உலகத்தில் இருந்தும் அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com