ஒரு லட்சம் பேர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி: ராஜஸ்தானில் கின்னஸ் சாதனை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
கின்னஸ் சாதனை'' புகழ் நிகழ்ச்சியில் யோகாசனம் செய்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே மற்றும் பாபா ராம்தேவ்.
கின்னஸ் சாதனை'' புகழ் நிகழ்ச்சியில் யோகாசனம் செய்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே மற்றும் பாபா ராம்தேவ்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
யோகா குரு பாபா ராம்தேவ் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார். ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கின்னஸ் அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர், கின்னஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில அரசு, பதஞ்சலி யோகபீடம், கோட்டா மாவட்ட நிர்வாகம் ஆகியோரால் நடத்தப்பட்ட மாபெரும் யோகா சாதனை நிகழ்ச்சி'' என்று அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கணக்கிடப்பட்டது. அதே சமயம், கணக்கில் வராத நபர்களையும் சேர்த்தால் 2 லட்சத்தை தொடும் எனக் கருதப்படுகிறது.
கின்னஸ் சாதனை அமைப்பில் இந்தியாவுக்கான பிரதிநிதிகளும், லண்டனைச் சேர்ந்தவர்களுமான ஸ்வப்னீல், ரிபிக்கா ஆகியோர் கோட்டா நகருக்கு வந்திருந்தனர். சாதனை சான்றிதழை முதல்வர் வசுந்த்ரா ராஜே மற்றும் பாபா ராம்தேவிடம் அவர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி காலை 5 மணிக்கே தொடங்கியது. சாதனையை உறுதி செய்வதற்கான 15 யோகாசனங்கள் காலை 6.30 மணியில் இருந்து 7 மணி வரை செய்யப்பட்டன.
யோகா நிகழ்ச்சிக்கு பிறகு, ராஜஸ்தான் முதல்வர் வசுந்த்ரா ராஜே பேசுகையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் யோகா பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியையொட்டி 4,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, மைசூரில் கடந்த ஆண்டு 55,524 பேர் யோகா செய்ததே உலக 
சாதனையாக இருந்து வந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com