பாஜகவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: காஷ்மீர் விவகாரம் குறித்து சிவசேனை கருத்து

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அராஜகத்தை பரப்பிய பிறகு, ஆட்சி அதிகாரத்தை விட்டு பாஜக வெளியேறியிருப்பதாக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அராஜகத்தை பரப்பிய பிறகு, ஆட்சி அதிகாரத்தை விட்டு பாஜக வெளியேறியிருப்பதாக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது.
பேராசை கொண்ட பாஜக-வை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் சிவசேனை சாடியுள்ளது. மத்திய அரசிலும், மகாராஷ்டிர மாநில அரசிலும் பாஜகவுடன் சிவசேனை கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியில் இருந்த பிடிபி - பாஜக கூட்டணி உடைந்ததால் அங்கு ஆளுநர் ஆட்சி அமலாகியுள்ளது. இந்நிலையில், சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னா'' நாளிதழில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அராஜகத்தை பரப்பிய பிறகு ஆட்சியை விட்டு வெளியேறியிருக்கிறது பாஜக. அங்கு நிலைமை, இந்த அளவுக்கு ஒருபோதும் மோசம் அடைந்ததில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு வீரர்கள் பலர் மரணம் அடைந்திருக்கின்றனர். இதுபோன்று ரத்த ஆறு ஒருபோதும் ஓடியதில்லை.
இது எல்லாமே பாஜக ஆட்சியில் இருந்தபோது நடந்தவைதான். ஆனால், பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி மீதே குற்றம்சாட்டப்படுகிறது. பாஜக நல்ல மனிதரைப் போல ஆட்சியை விட்டு வெளியேறிவிட்டது.
பாஜகவின் பேராசை காரணமாகத்தான் அந்த அரசு அமைக்கப்பட்டது. நாடும், ஜம்மு-காஷ்மீர் மக்களும், ராணுவ வீரர்களும் பாஜகவின் பேராசைக்கு நல்ல விலையை கொடுத்துவிட்டனர். ஆனால், வரலாறு இதை ஒருபோதும் மன்னிக்காது.
காஷ்மீரில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணியே பரவாயில்லை என்று மக்கள் இன்றைக்கு உணருகின்றனர். இன்றைக்கு காஷ்மீரிகள் ராணுவம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பயங்கரவாதிகள் ராணுவ நிலைகள் மீது தாக்குகிறார்கள். ராணுவ வீரர்கள் மறித்துப் போகும் அதேவேளையில் பொதுமக்களும் உயிரிழக்கின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் தான் பாஜகவினரும், நரேந்திர மோடியும் மத்தியில் ஆட்சியை பிடித்தனர். அவர் உலகை சுற்றி பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், காஷ்மீரில் அரசு அத்துமீறலில் ஈடுபடுவதாக ஐ.நா. அவை அறிக்கை வெளியிடுகிறது. ஒரு தேசத்தை ஆள்வது என்பது குழந்தைத்தனமான விளையாட்டு அல்ல என்று சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com