2019 தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி?

2019 தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி?

2019 தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதை சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக பேரவைத் தேர்தலில் முன்னோட்டமாக நடத்தியது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சோனியா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடந்த தேர்தல் வரை கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மஹாராஷ்டிராவில் 15 வருடங்கள் ஆட்சி செய்துள்ளது. அதுபோல மத்திய அமைச்சரவையிலும் சரத் பவார் இடம்பெற்றுள்ளார். எனவே அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இரு கட்சிகளின் நிலைப்பாடும் தெரியவரும் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com