மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக கார்கே நியமனம்: ராகுல் நடவடிக்கை

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக கார்கே நியமனம்: ராகுல் நடவடிக்கை

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கட்சித் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.
இதுதவிர, அந்த மாநில காங்கிரஸ் செயலர்களாக, குஜராத்தைச் சேர்ந்த சோனல் படேல், ஹரியாணாவைச் சேர்ந்த ஆஷிஷ் துவா, தெலங்கானாவைச் சேர்ந்த சம்பத் குமார் ஆகிய மூவரையும் ராகுல் நியமித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இதுவரை பதவி வகித்து வந்த மோகன் பிரகாஷின் இடத்துக்கு மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
மோகன் பிரகாஷுக்கும், மகாராஷ்டிர காங்கிரஸ் செயலர் பதவியை இதுவரை வகித்து வந்த ஷியோராஜ் ஜீவன் வால்மீகி, பாலா பச்சன் ஆகியோருக்கும் ராகுல் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலர் அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com