லாலு பிரசாத்துக்கு ஜூலை 3 வரை ஜாமீன் நீட்டிப்பு

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
லாலு பிரசாத்துக்கு ஜூலை 3 வரை ஜாமீன் நீட்டிப்பு

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
முன்னதாக, லாலுவின் உடல் நிலை மற்றும் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சைகளின் அடிப்படையில் அவருக்கு கடந்த மே 11-ஆம் தேதி, ஒன்றரை மாதம் ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த ஜாமீன் வரும் 27-ஆம் தேதி நிறைவடைய இருப்பதை அடுத்து, ஜாமீன் நீட்டிப்பு கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி, ஜூலை 3-ஆம் தேதி வரை லாலுவின் ஜாமீனை நீட்டித்தார்.
பல கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சி ரிம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட லாலு, சில தினங்களுக்கு முன்பு, அங்கிருந்து மீண்டும் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, தான் சிறப்பு சிகிச்சை பெற 3 மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு சார்பில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஜாமீன் கிடைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com