முஃப்தியின் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் முஃப்தி முகமது சயீது மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று அ
முஃப்தியின் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் முஃப்தி முகமது சயீது மேற்கொண்ட சோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்று அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சைஃபுதின் சோஸ் கூறியுள்ளார்.
 இதுதொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
 ஜம்மு-காஷ்மீரில் பிடிபி-பாஜக கூட்டணி என்பது தொடக்கத்தில் இருந்தே சரியான ஒன்றாக இருந்ததில்லை. அந்த இரு கட்சிகளும் ஒரு காந்தத்தின் வட மற்றும் தென் துருவங்களைப் போன்றவையாகும். பிடிபி கட்சித் தலைவர் முஃப்தி முகமது சயீது, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மேற்கொண்ட பரிசோதனை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
 இந்தக் கூட்டணி அமைத்ததன் மூலமாக பிடிபி கட்சி மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதனால் தோல்வியைச் சந்தித்துள்ள அக்கட்சி, மக்களின் அதிருப்திக்கு ஆளாகியதுடன் வெறுக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.
 பாஜகவைப் பொருத்த வரையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கு சாதகமாக அக்கட்சிக்கு ஓர் விவகாரம் தேவை. அதற்காகவே பிடிபி கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
 இனி, எதிர்வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, நாட்டு நலனுக்காகவே பிடிபி கூட்டணியில் இருந்து விலகியதாக பாஜக கூறும். உண்மையில், தங்களது நலனுக்காக அந்தச் செயலை செய்த பாஜக, காஷ்மீரில் தற்போது மதவாதத்தை பரப்பும்.
 காஷ்மீர் பள்ளத்தாக்கை பொருத்த வரையில், மத்திய அரசு தனது கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். காஷ்மீருக்கு இனி அதிகமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை மத்திய அரசு அனுப்பும்.
 இதனால் உயிரிழப்புகள் அதிகமாகுமே தவிர, தீர்வுகள் கிடைக்காது. மாநில ஆளுநர் என்.என்.வோரா காஷ்மீரை புரிந்துகொண்டுள்ளார். அவர் நல்லாட்சி வழங்க இயலும். ஆனால், எவ்வளவு நாள் மத்திய அரசு அவரை நீட்டிக்கச் செய்யும் என தெரியவில்லை என்று சைஃபுதின் சோஸ் கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com