வெளிநாட்டு மசூதிகளுக்கு போகலாம்; அயோத்திக்கு வர முடியாதா?: மோடி மீது தொகாடியா பாய்ச்சல் 

வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்லும் பிரதமா் நரேந்திர மோடிக்கு அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு வர நேரமில்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மூத்த தலைவா் பிரவீண் தொகாடியா......
வெளிநாட்டு மசூதிகளுக்கு போகலாம்; அயோத்திக்கு வர முடியாதா?: மோடி மீது தொகாடியா பாய்ச்சல் 

லக்னெள: வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்லும் பிரதமா் நரேந்திர மோடிக்கு அயோத்தியில் உள்ள ராமா் கோயிலுக்கு வர நேரமில்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மூத்த தலைவா் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளாா்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்தர்ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் எனும் புதிய அரசியல் அமைப்பை தொகாடியா அண்மையில் தொடங்கினாா். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகா் லக்னெளவில் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது:

வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல பிரதமா் மோடிக்கு நேரம் இருக்கிறறது. ஆனால், அயோத்திக்கு வருவதற்கும், அங்குள்ள ராம்லாலா கோயிலில் வழிபாடு நடத்துவதற்கும் மட்டும் அவரிடம் நேரம் இல்லை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை.

அயோத்தி, மதுரா, காசி ஆகிய இடங்களில் கோயில்களை கட்டுவது தொடா்பாக சட்டமியற்றறாமல், அவா்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களை ஏமாற்றி விட்டனா்.

மத்திய அரசு பிற பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறறது எனில், கோயில்கள் கட்டுவது தொடா்பான மசோதாவை நான் தயாரித்து தருகிறேறன். அதை நாடாளுமன்றறத்தில் தாக்கல் செய்து மத்திய அரசு மசோதாவாக நிறைறவேற்றலாம்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டக்கோரி, லக்னெளவில் இருந்து அயோத்திக்கு பேரணி நடத்துவதற்கு எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டக்கோரி, கையெழுத்து இயக்கத்தையும் எங்களது அமைப்பு தொடங்கவுள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்றற பாஜகவின் கோஷத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஹிந்துக்களின் வளா்ச்சி மீதே எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது அமைப்பில் இருப்போா் வேண்டுமானால், புதியவா்களாக இருக்கலாம். ஆனால், ஹிந்துக்களின் உரிமைகளுக்காக அவா்கள் மிகவும் தீவிரத்துடன் போராடக் கூடியவா்கள் என்றாா் பிரவீண் தொகாடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com