எம்எல்ஏ-க்களை மதிக்காத அதிகாரிகள் - குஜராத்தில் 3 பாஜக எம்எல்ஏ-க்கள் குற்றச்சாட்டு

குஜராத்தில் அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை என்று மது ஸ்ரீவஸ்தவா, யோகேஷ் படேல் மற்றும் கேதான் இனாம்தர் ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குஜராத் முதல்வர் (கோப்புப்படம்)
குஜராத் முதல்வர் (கோப்புப்படம்)

குஜராத்தில் வகோதியா, மஞ்சல்பூர் மற்றும் சாவ்லி ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முறையே மது ஸ்ரீவஸ்தவா, யோகேஷே படேல் மற்றும் கேதான் இனாம்தர் ஆகியோர் குஜராத்தின் பணிபுரியும் அதிகாரத்துவம் வாய்ந்த அதிகாரிகள் தங்களின் கருத்துக்கு செவி சாய்ப்பதில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும், அவர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களை இரக்கமற்ற அணுகுமுறையில் நடத்துவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதுகுறித்து ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இன்று நாங்கள் 3 பேர், நாளை இது 13 ஆகலாம், 23 ஆகலாம். 6 மாதங்களுக்கு முன்பு அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்றவாறு வேலை செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட செவ்வாய்கிழமைகளில் நாங்கள் அமைச்சர்களை சந்திக்க சென்றால், எங்களால் அவர்களை சந்திக்க முடியவில்லை. முதல்வரை சந்திக்க செல்லும் போது அனுமதி மறுக்கப்பட்டால் நாங்கள் வரிசையில் நிற்கப்போவதில்லை" என்றார்.  

இந்த விவகாரத்தில் மூத்த அமைச்சர் புபேந்திரசின் சுதாசமா தலையிட்டு சரிசெய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து புபேந்திரசின் சுதாசமா கூறுகையில், நான், துணை முதல்வர் நிதின் மற்றும் மாநில பாஜக தலைவர் ஜிதுபாய் ஆகியோர் சம்மந்தப்பட்ட நபர்களுடன் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று கூறினார். 

பாஜக செய்திதொடர்பாளர் பாரத் பாண்டியா கூறுகையில், "அந்த 3 பேருக்கும் கட்சி மாநில தலைவரை நேரில் சந்திக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் குறையை சரியான முறையில் அணுகுமாறு கூறப்பட்டுள்ளது" என்றார். 

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி 6 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (புதன்கிழமை) வெளிநாடு கிளம்பி சென்றார். இதற்கு சில மணி நேரத்துக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com