அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும்: கூட்டணி விரிசலுக்கு கர்நாடக அமைச்சர் கோரிக்கை

அனைவரும் தங்களுக்கிடையிலான விருப்பு, வெறுப்புகளை களைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும்: கூட்டணி விரிசலுக்கு கர்நாடக அமைச்சர் கோரிக்கை

தென் கன்னட மாவட்டத்தில் மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலாவில் தங்கியிருந்து இயற்கை மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, தனது ஆதரவாளர்களிடையே பேசுகையில், "மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஓராண்டுக்கு மேல் நீடிக்காது' என்று கூறியிருந்த காணொலிக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றக் கூட்டத்தொடரில் அப்போதைய முதல்வராக இருந்த சித்தராமையா, பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து தற்போது முதல்வராக உள்ள குமாரசாமி, புதிய பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.

இதனால் இருவருக்கும் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாகவும், இது மஜத, காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தான் யாரிடமும் பிச்சை எடுத்தும், யாருடைய தயவிலும் முதல்வராகவில்லை என்று குமாரசாமி கூறியுள்ளது இரு கட்சிகளுக்கு இடையிலான விரிசலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

நாம் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை நன்கு அறிவோம். எனவே நமக்கு இடையிலான விருப்பு, வெறுப்புகளை களைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். காங்கிரஸ், மஜத இடையிலான கூட்டணி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளார். எனவே அவரது தலைமையின் கீழ் இக்கூட்டணி அரசானது செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com