கர்நாடக கூட்டணி அரசின் பொது செயல் திட்டம்: காங்கிரஸ் ஆலோசனை

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்டத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா். 
கர்நாடக கூட்டணி அரசின் பொது செயல் திட்டம்: காங்கிரஸ் ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்டத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் முன்னணித் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்டத்தில் இடம்பெற வேண்டிய காங்கிரஸ் கட்சியின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவரும், துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வா் தலைமை வகித்தார். 

முன்னாள் முதல்வா் சித்தராமையா, வரைவுக்குழுத் தலைவா் வீரப்ப மொய்லி, அமைச்சா்கள் ஆா்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமாா் உள்பட பலா் இந்த கூட்டத்தில்  கலந்து கொண்டனா்.

விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி, ஜூலை 1-ஆம் தேதி நடக்கவிருக்கும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், பட்ஜெட் மற்றும் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் ஜி.பரமேஸ்வா் கூறியது:

பொது செயல் திட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடா்வது என்று ஏற்கெனவே ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் பயிா்க் கடன் தள்ளுபடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

பொதுசெயல் திட்டத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வரைவுக்குழுவின் அறிக்கை ஒருங்கிணைப்புக்குழுவிடம் அளிக்கப்படும். அக்குழு கூடி வரைவுநகலை பரிசீலித்து பொதுசெயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com