இந்தியா, வியட்நாம் இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா, வியட்நாம் இடையே ராணுவம், எரிவாயு, ஜவுளி, விவசாயம் உள்ளிட்ட 12 முக்கிய ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்திடப்பட்டன.
இந்தியா, வியட்நாம் இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

வியட்நாம் பிரதமர் ட்ரான் டாய் குவாங் தனது மனைவியுடன் 3 நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்ழமை இரவு இந்தியா வந்தடைந்தார். தில்லியில் அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றனர். அவருக்கு முப்படை அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அதன்பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசினார். இதையடுத்து இருநாட்டு பிரதமர்களும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது ராணுவம், எரிவாயு, விவசாயம், ஜவுளி உள்ளிட்ட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் பாதுகாப்புத்துறையில் இணைந்து செயல்படுவது தொடர்பாக வியட்நாம் அரசுக்கு இந்தியா தரப்பில் 500 மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

ஆசியான் கூட்டமைப்பில் இந்தியா, வியட்நாம் இடையே நல்லுறவு நீடிக்கிறது. இதன் அடிப்படையில் வியட்நாமைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் கல்வி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா மீது வியட்நாம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் தலைவணங்குகிறேன். இனிவரும் காலங்களில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறையிலும், தொழில்நுட்பத்துறையிலும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேம்படுத்த விரும்புகிறேன். சர்வதேச எல்லையில் இருநாடுகளின் உறவுகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தியாவும், வியட்நாமும் வெளிப்படைத்தன்மையுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன.

அதுபோல தகவல்தொழில்நுட்பத்துறை, விண்வெளி, விவசாயம், ஜவுளி, எரிவாயு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் இணைந்து செயல்படுவது தொடர்பாக திட்டமிட்டுள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com