ஆர்எம்பி கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்: கேரள சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் கூட்டணி வெளிநடப்பு

கேரளத்தில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்எம்பி) தொண்டர்கள் மீது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து

கேரளத்தில் புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (ஆர்எம்பி) தொண்டர்கள் மீது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில சட்டப் பேரவையில் இருந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்த மூத்த தலைவரான டி.பி.சந்திரசேகரன் ஆர்எம்பி கட்சியைத் தொடங்கினார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பலால் கடந்த 2012-ஆம் ஆண்டில் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகும் அக்கட்சியினர் மீது ஆளும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தின் ஒஞ்சியம் பகுதியில் ஆர்எம்பி கட்சித் தொண்டர்கள் மீது ஆளுங்கட்சியினர் கடந்த மாதத் தொடக்கத்தில் நடத்தி தாக்குதல் குறித்து அம்மாநில சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா வியாழக்கிழமை பிரச்னை எழுப்பினார். இது குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியது:
ஆர்எம்பி தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீஸார் இதுவரை ஒரு வழக்கையும் பதிவு செய்யவில்லை. 
அதனால்தான் இந்த விவகாரத்தை பேரவையில் எழுப்புகிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது என்று சென்னிதலா குறிப்பிட்டார்.
அதற்கு முதல்வர் பினராயி விஜயன்பதிலளித்துப் பேசுகையில், 'எதிர்க்கட்சிகள் எழுப்புவதற்கு வேறு விவகாரம் இல்லாததால் இந்தப் பிரச்னையை எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அங்கு நிலைமை அமைதியாக உள்ளது' என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் நிராகரித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com