மேகாலயம்: 11 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு

மேகாலயத்தில் 11 அமைச்சர்களுக்கு முதல்வர் கான்ராட் கே சங்மா இலாக்காக்களை ஒதுக்கீடு செய்தார்.

மேகாலயத்தில் 11 அமைச்சர்களுக்கு முதல்வர் கான்ராட் கே சங்மா இலாக்காக்களை ஒதுக்கீடு செய்தார்.
மக்களவை முன்னாள் தலைவரும், மேகலாயத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பி.ஏ.சங்மாவின் மகனான கான்ராட் கே சங்மா மேகலாயத்தின் புதிய முதல்வராக சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திரட்டி அந்தக் கட்சி ஆட்சி அமைத்தது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதித் துறை, திட்டமிடல், பணியாளர் உள்ளிட்ட சில முக்கியத் துறைகளை முதல்வர் சங்மா தன் வசம் வைத்துக் கொண்டார். பிற துறைகளை 11 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்தார். எந்தெந்த அமைச்சருக்கு எந்த இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த பட்டியல், ஆளுநர் கங்கா பிரசாத்துக்கு அனுப்பி வைத்து அவரது ஒப்புதல் பெறப்பட்டது.
பிரெஸ்டோன் டின்சாங்குக்கு சாலை, சட்டப் பேரவை விவகாரங்கள் மற்றும் தொழிளாளர் நலன் ஆகிய துறைகளும், அமைச்சர் ஸ்னியாவ்பாலாங்குக்கு போக்குவரத்து, தொழிலகம், ஊரக வளர்ச்சித் துறைகளும் ஒதுக்கப்பட்டன. தேசிய மக்கள் கட்சியின் எம்எல்ஏவான ஜேம்ஸ் கே சங்மாவுக்கு உள்துறை, உணவுப் பொருள் வினியோகம், மாவட்டக் கவுன்சில் விவகாரங்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.
பாஜக எம்எல்ஏவான ஏ.எல்.ஹெக்குக்கு சுகாதாரம், கலை மற்றும் கலாசாரம், தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைகளும், ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ கிர்மன் ஷில்லாவுக்கு சுற்றுலாத் துறையும் அளிக்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com