அமைதி பேச்சுவார்த்தைக்கான சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும்: இந்தியா

அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் எழுத்துப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்திருக்கும் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ளவே இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவும், அமைதியான முறையிலும் தீர்வு காண இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதை பாகிஸ்தானிடம் இந்தியா தெளிவாக தெரிவித்து விட்டது.
ஆனால், அதேநேரத்தில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழ்நிலையில் மட்டுமே நடத்த முடியும். இதற்கு உகந்த சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். இது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது. அதேபோல், எல்லைத் தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக இந்தியா உறுதியான மற்றும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் என்று அந்தப் பதிலில் அஹீர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் 633 முறை அத்துமீறல்: கங்காராம் அஹீர் தாக்கல் செய்துள்ள மற்றோர் பதிலில், 'நிகழாண்டில் கடந்த 2 மாதங்களில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 633 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேரும், பொது மக்கள் 12 பேரும் பலியாகியுள்ளனர். 
கடந்த 2017ஆம் ஆண்டில் பாகிஸ்தான் படையினர் எல்லை கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் 860 முறையும், சர்வதேச எல்லையில் 111 முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கங்காராம் அஹீர் தாக்கல் செய்துள்ள மற்றோர் பதிலில், நிகழாண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் தொடர்பான 60 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் பாதுகாப்புப் படையினர் 15 பேரும், பயங்கரவாதிகள் 17 பேரும் பலியாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com