சீனாவில் அடுத்த மாதம் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீனாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
சீனாவில் அடுத்த மாதம் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீனாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
சீனாவின் குவிங்டாவ் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். 
இந்த மாநாட்டுக்கு முன்னதாக, சீனாவில் வரும் ஏப்ரல் மாதம் 23, 24ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனாவுக்கு அடுத்த மாதம் சுஷ்மா ஸ்வராஜ் செல்லவுள்ளார். 
இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார். அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
ஜப்பானுக்கு வரும் 28ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். அமெரிக்காவுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இதேபோல், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமனும், அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
சீனாவில் சுஷ்மா சுற்றுப்பயணம் செய்யும்போது, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு, சுஷ்மாவின் சீன பயணம் இரு நாடுகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும் எனத் தெரிகிறது என்றார் அவர்.
பூடான் எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியை நோக்கி சீன வீரர்கள் சாலையமைக்கும் பணியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈடுபட்டதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். 
இதையடுத்து இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே சுமார் 70 நாள்கள், டோக்கா லாம் பகுதியில் முற்றுகை நீடித்தது. இதுகுறித்து இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த முற்றுகை முடிவுக்கு வந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com