தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையை (எய்ம்ஸ்) அமைக்கும் விவகாரத்தில்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை செவ்வாய்க்கிழமை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையை (எய்ம்ஸ்) அமைக்கும் விவகாரத்தில் விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தில்லியில் காசநோய் ஒழிப்புகுறித்த மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விஞ்ஞான் பவனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா முன்னிûயில் நடைபெற்ற இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: 
இம்மாநாட்டின் போது உலக அளவில் காச நோûயை 2030-க்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் 2025-க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். 
மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 
எய்ம்ஸ் மருத்துவமனை: இம்மாநாட்டு இடைவேளையின் போது அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்தேன். அப்போது, தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தேன்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழில்நிறுவனங்கள், ரயில்வே, விமான நிலைய வசதிகள் குறித்த 'சவால் வழிமுறை' விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசின் மூலம் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன. இனி இந்த விஷயத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதால், அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். 
இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார் என்றார்அமைச்சர் விஜயபாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com