அண்ணா ஹசாரே போராட்டத்துக்கு முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆதரவு

லோக்பால் விவகாரத்துக்காக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்த இருக்கும் போராட்டத்துக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கர்நாடக லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதியுமான
அண்ணா ஹசாரே போராட்டத்துக்கு முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆதரவு

லோக்பால் விவகாரத்துக்காக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நடத்த இருக்கும் போராட்டத்துக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கர்நாடக லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதியுமான என்.சந்தோஷ் ஹெக்டே ஆதரவு தெரிவித்துள்ளார்.
லோக்பால் உள்ளிட்ட விவகாரத்துக்காக தில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் வரும் 23ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தாமும் கலந்து கொள்ள இருப்பதாக ஹெக்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தன்னுடன் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று ஹசாரே என்னைக் கேட்டுக் கொண்டார். எனவே, ஹசாரேயுடன் இணைந்து போராட்டம் நடத்த நான் ஒப்புக் கொண்டேன். லோக்பால் விவகாரத்தில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றார் ஹெக்டே.
முன்னதாக, லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டபின்னரும், அந்த அமைப்பை ஏற்படுத்தாமல் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாமதப்படுத்தி விட்டதாக ஹெக்டே குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பு ஏற்படுத்துவதை மத்தியில் ஆளும் கட்சி விரும்பவில்லை. லோக்பால் அலுவலகத்தில் இருந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட்டால், தனக்கு பிரச்னை வரலாம் என அக்கட்சி அஞ்சுகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தவில்லை. அந்த அமைப்பை ஏற்படுத்தும்படி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும், அதை அவர் அமல்படுத்தவில்லை. அதே நிலைப்பாட்டைதான் தற்போதும் அவர் கடைப்பிடிக்கிறார்' என்றார்.
லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி, அண்ணா ஹசாரே கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோதும் அவருக்கு ஹெக்டே ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com