தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலுக்கு புதிய திசையைக் காட்டியுள்ளது

உத்தரப் பிரதேச இடைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்திருப்பதாக சமாஜவாதி தலைவரும் முன்னாள்
தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலுக்கு புதிய திசையைக் காட்டியுள்ளது

உத்தரப் பிரதேச இடைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்திருப்பதாக சமாஜவாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தேர்தலில் சமாஜவாதிக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் மேலும் கூறியதாவது:
உத்தரப் பிரதேச இடைத் தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலுக்கு புதிய திசையை காட்டும் வகையில் உள்ளதாக கருதுகிறேன். இரு தொகுதிகளிலும் மக்கள் எங்களுக்கு ஏகோபித்த ஆதரவை அளித்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா ஆகியோர் அங்கம் வகித்த தொகுதிகளில் சமாஜவாதிக்கு வெற்றி கிடைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்திருப்பது போல நாடு முழுவதும் மக்கள் வெகுண்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
வளர்ச்சி, தேசியவாதம் என்ற பெயரில், நாட்டு மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார சமூகநிலை சீர்குலைக்கப்பட்டுவிட்டது.
இடைத் தேர்தல் முடிவுகள், சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாகும். இதே தேர்தலை வாக்குச் சீட்டு முறையில் நடத்தியிருந்தால் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி கண்டிருக்கும் என்றார் அவர்.
மேலும், லக்னௌவிலுள்ள மாயாவதியின் இல்லத்துக்கே நேரில் சென்று, அகிலேஷ் நன்றி தெரிவித்தார்.
உண்மைக்கு கிடைத்த வெற்றி: பிகாரில் அராரியா மக்களவைத் தொகுதிக்கும், ஜெகநாபாத் பேரவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள அவரது சுட்டுரைக் கணக்கை அவருக்கு மிக நெருக்கமானவர்கள் இயக்கி வருகின்றனர். அதில் லாலு பெயரில் வெளியிடப்பட்ட பதிவில், 'பொய்மையை வென்று, உண்மை வெற்றி பெற்றிருக்கிறது. நீதியை நிலை நாட்டியதற்காக பிகார் மக்களுக்கு தலைவணங்குகிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் யாதவ் கருத்து: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாஜகவின் வெற்றி வாய்ப்பை பறித்திருப்பதாக கூறிய ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத் யாதவ், மக்களின் விருப்பத்தை புறக்கணித்தவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று முதல்வர் நிதீஷ் குமாரையும் மறைமுகமாக சாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com