தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் சூடாக பதில்! 

காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.
தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சு: ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் சூடாக பதில்! 

புதுதில்லி: காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் ஞாயிறன்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியினை அவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அத்துடன் அவர் தனது பேச்சில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சியினை விமர்சனம் செய்து ராகுல் காந்தி பேசியது  தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக இருக்கிறது என்று மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.

தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி எப்போது நீதியின் பாதுகாவலராக மாறியது என்று தெரியவில்லை. நீதி தனக்கு எதிராக சென்றதும் இந்திரா காந்தி எப்படி செயல்பட்டார் என்பதை நாம் நினைவுப்படுத்த முடியும்.

1988-ம் ஆண்டு பிரஸ் மசோதா கொண்டுவரப்பட்டது, அப்போது மீடியாக்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்பட்டது? இந்திரா காந்தி மீடியாக்களை முழுவதும் இருட்டடிப்பு செய்தார். இப்போது அவருடைய பேரன் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து பேசுகிறார்.

இது தேர்தல் நேரம் என்பதால் விவசாயிகள் நெருக்கடி தொடர்பாக ராகுல் காந்தி பேசுகிறார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது? அவர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக வாக்கை மட்டும் பார்க்கிறார்கள்.கர்நாடகத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; அதைப்பற்றி காங்கிரஸ் பேசவில்லை.

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரட்டை இலக்கில் வளர்ச்சி உள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் நிலை என்ன?

கறுப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுருக்கமாக தோல்வியடைந்தவர்களின் அர்த்தமற்ற பேச்சாக ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com